திருச்சியில் சித்த மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 24வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

கே.என். நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாநாட்டு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

இந்த மாநாட்டில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், திருச்சியில் ஒரு சித்த மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என நான் கேட்டபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிச்சயமாக செய்து தருவதாக தெரிவித்துள்ளார்.

சித்த மருத்துவர் நல வாரியம் அமைக்க தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன்.

சித்த மருத்துவ நல வாரியத்தை தொடங்கி பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், சித்த மருத்துவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கவும் ஆவன செய்ய வேண்டும்

தமிழகத்தில் உள்ள அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்கவும், அக்குபஞ்சர் கவுன்சில் ஆரம்பிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb