பட்டாணி கடைக்காரரிடம் வாக்குவாதம்: சஸ்பெண்ட்டான சிறப்பு உதவி ஆய்வாளர்.

திருச்சியில் இலவசமாக பட்டாணி கேட்டு கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராதா. இவா் கடந்த திங்கட்கிழமை அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பட்டாணி கேட்டுள்ளார். எத்தனை ரூபாய்க்குத் தர வேண்டும் என கடை உரிமையார் ராஜன் கேட்டபோது, பணம் எல்லாம் தர முடியாது. யூனிஃபார்மில் உள்ள போலீசிடம் பணம் கேட்கிறாயா எனக் கோபமாக கேட்டுள்ளார்,
இதனால் கடை உரிமையாளருக்கும், சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாவுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா் விடாப்பிடியாக வற்புறுத்தி இலவசமாகவே பட்டாணியை கேட்டு பெற்றுச் சென்றுள்ளாா். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து விசாரணை நடத்திய திருச்சி மாநகர காவல் ஆணையா் காமினி, ஸ்ரீரங்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராதாவை பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....