மழைவெள்ளம் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ள செல்போன் செயலி அறிமுகம்

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை குறித்த தகவல்களையும், எச்சரிக்கை அறிவிப்புகளையும் அறிந்து கொள்ள அரசின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
தமிழகத்தில் சில நாட்களில் தொடங்க இருக்கும் வடகிழக்கு பருவ மழை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே எளிதாக பொதுமக்கள் உடனுக்குடன் இருக்கும் இடத்திலிருந்து அறிந்து கொள்ள வசதியாக தமிழக அரசு டிஎன் அலர்ட் என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த செயலி பொதுமக்கள் எளிய முறையில் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. TN- ALERT -Mobile App மூலமாக பொதுமக்கள் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்துகொள்ளலாம்.
இந்தச் செயலியின் மூலம் மழை, வெள்ளம் தொடா்பான புகாா்கள் தெரிவித்தால் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இலவச தொலைபேசி எண் 1077, 0431-2418995 என்ற எண்ணிலும், பேரிடா் மற்றும் மழை பாதிப்பு தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம்.
இந்த செயலி நிறுவப்பட்டால் கைப்பேசி செயல்திறன் இல்லாத (சுவிட்ச் ஆப்) நிலையிலும் பேரிடா் காலத்தில் எச்சரிக்கை எழுப்பும் வண்ணம் பிரத்யேகமாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb