முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் பொன் புதுப்பட்டியில் நடைபெறும் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் திருச்சி வர உள்ளார். அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்ல இருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்வதற்காக இன்று 5.50 மணியளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வருகை தர இருப்பதால் பாதுகாப்பு காரணம் கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 6 மணி முதல் இன்று முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கார் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் பொன். புதுப்பட்டிக்கு சுமார் 7 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் செல்கிறார்.
அங்கு அமைச்சர் ரகுபதி திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் கார் மூலம் 8 மணிக்கு திருச்சி திரும்பி அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரவுள்ளார்.
சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.ரகுபதியின் பேரன் டாக்டர் எஸ்.நாச்சியப்பன் ரகுபதி - டாக்டர் பி.அழகம்மை திருமணம் புதுக்கோட்டையை அடுத்த புதுப்பட்டியில் இன்று காலை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு விழா இன்று மாலை 6 மணி அளவில் புதுக்கோட்டை ஜெ.ஜெ கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb