மலக்குடலில் மறைத்து கடத்தல் தங்கம் பறிமுதல்

 

திருச்சி விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ.18.44 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இலங்கையிலிருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட ஒரு பெண் பயணியை அழைத்து சோதனை செய்தபோது, அவர் தங்க கட்டியை தனது ஆசன வாயில் மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

 

இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 242 கிராம் எனவும் அதன் மொத்த மதிப்பு ரூ.18,44,040 எனவும் அதிகாரிகள் அறிவித்தனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb