இந்த ஆண்டு அதிக அளவிலான விடுமுறைகள் வார இறுதியை நோக்கி அமைந்திருப்பதால், பெரிய அளவில் பலருக்கும் விடுமுறைகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வருகின்ற அக்டோபர் 10, 11 மற்றும் அக்டோபர் 31ம் தேதிகளில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை, அதை தொடர்ந்து தீபாவளி பண்டிகை என்று விழா கோளத்திற்குள் தமிழகம் நுழைந்து இருக்கிறது என்றே கூறலாம்.

அந்த வகையில் தாம்பரத்திலிருந்து கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்த சிறப்பு ரயில்கள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வண்டி என் 06184 தாம்பரத்திலிருந்து புறப்பட்டு கோயம்புத்தூர் செல்லுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படும். அதாவது அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை 11, 18, 25 ஆகிய தேதிகளிலும். நவம்பர் மாதத்தை பொறுத்தவரை 1, 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்த ரயில்கள் பயணிக்க உள்ளது. அதேபோல கோவையில் இருந்து 06185 என்கின்ற ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னைக்கு பயணிக்கவிருக்கிறது. குறிப்பாக அக்டோபரில் 13, 20, 27 ஆகிய தேதிகளிலும், நவம்பர் மாதத்தில் 10, 17, 24 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியும் இந்த ரயில் செயல்பட உள்ளது.

இந்த இரண்டு ரயில்களுக்கான முன்பதிவு இப்போது இருந்து தொடங்கி இருக்கிறது. இந்த ரயில் குறிப்பிட்ட வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு கோயம்புத்தூருக்கும், குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்புத்தூரில் இந்த புறப்பட்டு சென்னைக்கும் வந்தடைகிறது என்றாலும் கூட, இடையில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கூடலூர் மற்றும் கோவை ஆகிய ஊர்கள் வழியாக இந்த ரயில் பயணிப்பதால் இந்த ஊர்களில் உள்ள அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல வெள்ளிக்கிழமைகளில் செயல்படும் இந்த சிறப்பு ரயிலானது மாலை 6 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8:10க்கு கோவைக்கு சென்றடைகிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை கோவையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டும் அந்த ரயில் தாம்பரத்திற்கு அடுத்த நாள் மதியம் 12:30 மணிக்கு வந்து சேர்கிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb