சிறுகனூரில் 27 ஏக்கர் நிலத்தில் உருவாகப்போகும் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பெரியார் சிலை

திருச்சி சமயபுரம் அடுத்து உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் நிலத்தில் பெரியார் உலகம் என 155 அடி பெரியார் சிலையானது அமைக்கப்பட இருக்கிறது. இது மட்டுமல்லாமல், மண்டபம், நூலகம், ஆராய்ச்சி மையம், கோளரங்கம் மற்றும் மெழுகு அருங்காட்சியகம் என பல்வேறு கட்டமைப்புகளை கொண்டிருக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட இருக்கிறது.
இந்த பணிகளானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திறப்பு விழா வைப்பதற்காக முடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மொத்தம் 80 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த பெரியார் உலகத்தில் 14 மாடிகளை கொண்டு சிலையானது அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையின் உச்சி வரை மக்களுக்கு அனுமதி என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் நர்மதா நதிக்கரையில் 182 உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையானது அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில் உலகிலேயே அந்த சிலை தான் மிகவும் பெரியது. இதற்கு அடுத்தப்படியாக 155 அடி உயரத்தில் பெரியார் சிலையானது அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இந்த மிகப்பெரிய சிலையானது அமைக்கப்பட உள்ளது. இந்த சிலையின் பணிகள் அனைத்தும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்து அடுத்த ஆண்டு திறக்கப்படும்
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....