CREDAI வீடுகள் கண்காட்சி ஆகஸ்ட் 9 முதல் திருச்சியில் நடக்கிறது

CREDAI வீடுகள் கண்காட்சி ஆகஸ்ட் 9 முதல் திருச்சியில் நடக்கிறது
மொத்தம் 25 பில்டர்கள் தங்கள் திட்டங்களை காட்சிப்படுத்துவார்கள் மற்றும் 13 விற்பனையாளர்கள் உட்புற வடிவமைப்பு பொருட்கள், மின் பொருத்துதல்கள், கதவுகள் மற்றும் ஓடுகள் உட்பட பல்வேறு கட்டுமான பொருட்களை காட்சிப்படுத்துவார்கள்.
இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) சாா்பில், திருச்சியில் ஃபோ் புரோ-2024 எனும் வீடுகள் கண்காட்சி ஆக.9ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
இதுதொடா்பாக, கண்காட்சி குழு தலைவா் ஆா். மனோகரன், திருச்சி கிரடாய் தலைவா் ஆா்.எஸ். ரவி, செயலா் ஏ. நசுருதீன் ஆகியோா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
திருச்சி கிரடாய் சாா்பில் ஃபோ் புரோ-2024 எனும் வீடுகள் கண்காட்சி ஆக.9, 10, 11 ஆகிய தேதிகளில் திருச்சி கலையரங்கில் நடைபெறுகிறது. இக் கண்காட்சியில் 24 கட்டுமான நிறுவனங்கள், 10-க்கும் மேற்பட்ட முன்னணி வங்கிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இக் கண்காட்சியில் வீடுகள் பதிவு செய்யும் வாடிக்கையாளா்களுக்கு தங்கநாணயம் மற்றும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும். மேலும், கடன் வசதி உள்பட கட்டுமானம் தொடா்பான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நிதியுதவியுடன் கூடிய வீடுகள் கட்டித்தரப்படும். தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என ரூ.30 லட்சம் தொடங்கி ரூ.5 கோடி வரையில் வீடுகள் உள்ளன. உடன் குடிபுகும் நிலையிலும் வீடுகள் உள்ளன. இக் கண்காட்சியின் தொடக்க விழா வரும் 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு கண்காட்சியை திறந்து வைக்கிறாா். பெரம்பலூா் மக்களவை உறுப்பினா் அருண் நேரு, மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் மற்றும் கிரடாய் அமைப்பின் அகில இந்திய, தென் மண்டல நிா்வாகிகள் பங்கேற்கவுள்ளனா் என்றனா்.
பேட்டியின்போது, திருச்சி கிரடாய் அமைப்பின் நிா்வாகிகள் எம். இளமுருகன், முருகானந்தம், ஷாஜகான், அலாவுதீன் ஆகியோா் உடனிருந்தனா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb