தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை (தே.நெ.67)யில் திருச்சி மாவட்டம் துவாக்குடி முதல் பால்பண்ணை வரை, உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் பணிகளை விரைந்து மேற்கொள்ள பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அரசு செயலாளர் டாக்டர் ஆர்.செல்வராஜ், இ.ஆ.ப., தேசிய நெடுஞ்சாலை அலகு தலைமைப் பொறியாளர் எம்.பன்னீர்செல்வம், சிறப்பு அலுவலர்(டெக்னிக்கல்) இரா.சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் ப.செல்வகுமார் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பகுதிகளில் தான் மெட்ரோ பணிகளும் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb