திருச்சி மாவட்டத்துக்கும் கரூர் மாவட்டத்துக்கும் இடையே கட்டப்பட்ட வந்த உன்னியூர் பாலம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இதனால் திருச்சி மாவட்ட மக்கள் இனி எளிதில் சென்று வர முடியும்

திருச்சி மாவட்டம் உன்னியூருக்கும், கரூர் மாவட்டம் நெரூருக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில நெடுஞ்சாலைத் துறை (திட்டப் பிரிவு) பாலத்தின் கட்டுமானப் பணிகளை ஏறக்குறைய முடித்துவிட்டது. தற்போது சாலை பாதுகாப்பு தொடர்பான வேலைகள் மட்டும் பாக்கி உள்ளன. இந்த பாலம் கட்டப்படுவதால் ஆற்றின் இருபுறமும் உள்ள குடியிருப்பாளர்களுக்குப் பெரிய நிவாரணம் கிடைக்கும். அவர்களின் பயணமும் எளிதாகும்.

மேலும் திருச்சி மற்றும் கரூர் இடையேயும், கரூர் மற்றும் சென்னை இடையேயும் பயண நேரம் குறையும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI