திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்தில் உள்ள அரிஸ்டோ ரோட்டரி மாதிரியான உயர்மட்ட ரோட்டரி ஒன்றை கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற தென்னக ரயில்வே ஒத்துழைப்பு தேவை. ரயில்வே சுமார் எட்டு ஏக்கர் நிலம் ஒதுக்கினால், 15 வருட கோரிக்கை நிறைவேறும். இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு நேரடியாக செல்லும். இதனால் ரயில்வே நிலம் தேவைப்படுகிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த விஷயத்தில் ரயில்வேயின் முடிவை எதிர்பார்த்து இருக்கிறது.

இந்த மேம்பாலம், நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையை பொன்மலை ரயில்வே பணிமனையுடன் இணைக்கும். ஏற்கனவே உள்ள இரண்டு பாலங்கள் ரோட்டரியுடன் இணைக்கப்படும். 

இந்த திட்டத்திற்கு சுமார் 60 கோடி ரூபாய் செலவாகும். ரயில்வேயிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்தவுடன், திட்டத்திற்கான நிர்வாகப் பணிகளை தொடங்குவோம்" என்றார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI