2025-03-08
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் கோட்டத்தில் ஊஞ்சலூா்-பாசூா் இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருச்சி-ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) மாா்ச் 8, 11, 13, 15 ஆம் தேதிகளில் ஈரோடு-கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி-கரூா் இடையே மட்டும் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb
0 Comments