பல ஆண்டுகளாக பட்டப்படிப்பு நிறைவு செய்யாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற தன்னாட்சி, தன்னாட்சி அல்லாத கல்லூரிகளிலும், தொலைக்கல்வி மையத்திலும் இளநிலை பட்டப்படிப்பில் 2019-20-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சேர்க்கை பெற்றும், முதுநிலை பட்டப்படிப்பில் 2020-21-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சேர்க்கை பெற்றும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்திருந்த என் பிளஸ் 2 கால வரையறைக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்ய இயலாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடைபெற உள்ளது.

இதில் எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் திட்ட கட்டுரை என நிலுவைத் தாள்கள் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வருகிற ஏப்ரல் பருவத்தில் மட்டும் சிறப்பு தேர்வு எழுதிக் கொள்ள பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கிறது. இத்தேர்வுகள் நடத்துவது பற்றி அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும், தொலைக்கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு விட்டது.

நிலுவைத் தாள்களை வைத்திருக்கும் மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளையோ அல்லது தொலைக்கல்வி மையத்தையோ அணுகி தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய கடைசி நாள் வருகிற பிப்ரவரி 28-ந் தேதி ஆகும்.

மேலும் விவரங்களுக்கு கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் www.bdu.ac.in என்ற இணையதளத்திலும், தொலைக்கல்வி மைய மாணவர்கள் www.bdu.ac.in/cde என்ற இணையதளத்திலும் சென்று தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb