தமிழகம் முழுவதும் முன்பதிவு இருக்கை பெட்டிகளை கொண்டு இயக்கப்பட்ட திருச்சி தாம்பரம் ஜன்சதாப்தி விரைவு ரயில் பயணிகள் இடையே வரவேற்பை பெற்று வந்தது.

ஜனவரி மாதம் 4-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இந்த ரயிலானது வார இறுதி நாட்களில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் மொத்தமாக 1580 இருக்கைகள் இருந்தது.

 வண்டி எண் 06190 திருச்சி தாம்பரம் ரயிலில் ஒவ்வொரு நடையிலும் சராசரியாக 1006 பேர் பயணித்துள்ளனர். இது சராசரியாக 64 சதவீதம் ஆகும். இதேபோல் தாம்பரம் திருச்சி ரயிலில் 88 சதவீதம் இருக்கைகள் நிரம்பி உள்ளது.

இது தவிர நடப்பு முன்பதிவு வசதி மூலம் காலி இருக்கைகளில் கூடுதலாக மேலும் சில பயணிகள் பயணம் செய்துள்ளனர். பொதுவாக தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே மெயின் லைன் ரயில்வே பாதையில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் பயணிகளின் பயன்பாடு அதிகரித்து கொண்டே காணப்படுகிறது.

திருச்சி தாம்பரம் இடையே இயக்கப்பட்ட பகல் நேர சிறப்பு ரயில் சென்னை சென்று வருபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே இந்த ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்றும் தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb