முசிறியில் 8 சிறிய பாலங்களுடன் 9 கி.மீ. நீளத்துக்கு புதிய புறவழிச்சாலை

முசிறியில் 230 கோடி ரூபாய் செலவில் 9 கி.மீ. நீளத்துக்கு புதிய புறவழிச்சாலை அமைக்க பணிகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வருகின்றன.
முசிறி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் முசிறியில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி நாமக்கல், சேலம் மற்றும் தமிழகத்தின் பிற மேற்கு மாவட்டங்களுக்கு செல்ல ஏதுவாக முசிறி நகரில் புதிய புறவழிச்சாலை அமைய இருக்கிறது.
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் திருச்சி முதல் நாமக்கல் வரை செல்லும் சாலையில் உமையான்புரம் பகுதியில் தொடங்கி முசிறி-தண்டலைப்புத்தூர், முசிறி-துறையூர், முசிறி -தாத்தையங்கார்பேட்டை ஆகிய 3 சாலைகள் இணைக்கப்படும். மேலும் பல்வேறு கிராமப்பகுதிகள் வழியாக முசிறி நகரப் பகுதியைத் தாண்டி கொக்குவெட்டியான் கோவில் அருகே திருச்சி-நாமக்கல் நெடுஞ் சாலையில் முடியும்படி சுமார் 9 கி.மீ. நீளத்தில் புறவழிச் சாலை அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தற்போது நில அளவீட்டுப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 74 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது அதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, சுமார் 30 கோடி ரூபாய் செலவில் 31 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத் தப்பட்டு, புறவழிச்சாலை அமைக் கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சாலையில் உமையாள்புரம், செவந்திலிங்கபுரம், சீவம்பட்டி ஆகிய 3 கிராமங்களில் சுமார் 10 மீட்டர் நீளத்துக்குள் தலா 20 லட்சம் ரூபாய் செலவில் 8 சிறிய பாலங்கள் கட்டப்பட இருக்கின்றன. பாலங்கள் கட்டப்படும் இடங்களில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கக்கூடிய திருச்சி நாமக்கல் சாலையின் இரண்டு புறமும் கடைகள் மற்றும் கட்டிடங்கள் இருப்பதால் சாலை விரிவாக்கம் செய்தால் கட்டிடங்கள் இடிக்க வேண்டியிருக்கும். இதனைத் தவிர்க்கும் விதமாக நகர எல்லைக்குள் வராமல் சமவெளி நிலப்பரப்பு உள்ள கிராம எல்லைகள் வழியாகத் தொடங்கி முடியும் வகையில் இருவழிச்சாலையாக புறவழிச்சாலை அமைக்கப்பட இருக்கிறது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....