பஞ்சப்பூரில் திருச்சி டைடல் பார்க் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதியை விண்ணப்பித்துள்ளது

♦️ G+6 தளங்கள்
♦️ திட்ட செலவு: 415 கோடி
♦️ கார் பார்க்கிங் : 740 எண்கள்
♦️ இரு சக்கர வாகனங்கள் : கிட்டத்தட்ட 1500 எண்கள்
விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பகுதியில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.
14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 93 ஆயிரம் சதுரடியில் சுமார் 415 கோடி ரூபாய் செலவில் இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இந்த டைடல் பார்க்கில் 740 கார் பார்க்கிங் மற்றும் 1500 இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப பூங்காவானது தரைதளத்துடன் கூடிய 6 தளங்களுடன் அமைக்கப்படும் எனவும் இந்த டைடல் பூங்காவுக்கான கட்டுமானப்பணிகள், வடிவமைப்பு ஆகியவற்றுக்காக தமிழக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணிகள் தொடர்பாக சமீபத்தில் அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைடல் பூங்கா பணிகளை சுமார் 18 மாதங்களுக்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த டைடல் பார்க் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி டைடல் நிறுவனமானது விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்த உடன் இந்த பணிகள் அனத்தும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்து செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு இந்த டைடல் பார்கில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....