இந்தியாவில் முதன் முறையாக திருச்சி மாவட்டத்துக்கு கிடைக்க போகும் பெருமை!

இந்தியாவில் முதன் முறையாக திருச்சியில் அடியெடுத்து வைக்க போகும் Dolby தொழில்நுட்பம்
திருவெறும்பூரில் உள்ள காட்டூர் பகுதியில் LA வணிக வளாகம் சினிமா திரையரங்குடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் பிரபல கடைகளுடன் 6 ஸ்கிரீன்களுடன் Dolby திரைகளுடன் கூடிய தியேட்டர்களும் அமைக்கப்பட்டு வருகிறது
மேலும் இந்த வணிக வளாகமானது 4 மாடிகளை கொண்டதாகவும், 1.26 லட்சம் சதுர அடி பரப்பளவிலும் கட்டப்பட்டு வருகிறது. பல்வேறு பிரபலமான கடைகளும் இங்கு திறக்கப்பட இருக்கிறது. மினி மால் போன்று இருக்கும்.
இந்த வணிக வளாகத்தின் பணிகள் அனைத்தும் இறுதிகட்டத்தில் துரிதமாக நடைபெற்று வருவதால் விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் முதன் முறையாக திருச்சி மாவட்டத்தில் டால்பி சினிமா ஸ்கிரீன் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் புதுமையான திரைப்பட அனுபவத்தை காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....