2024-11-23
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
திருச்சி பஞ்சபூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் பூமி பூஜை

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் பூமி பூஜையை கே என் நேரு துவங்கி வைத்தார்.
பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் அருகே புதிய ஆம்னி பேருந்து நிலையம் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நிலையில் பூமி பூஜையை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு துவங்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, மேயர் அன்பழகன், மாநகராட்சி பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி, துர்கா தேவி, கவுன்சிலர்கள் முத்து செல்வம், கஜாமலை, விஜய், சுரேஷ், மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments