2024-10-28
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
திருச்சிக்கு வரும் பரத் மால்!

எப்போது தொடங்கும் என்று மக்கள் அனைவரும் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் சஞ்சீவி நகரில் 3.9 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஷாப்பிங் மால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பரத் மால் எனும் பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சிபிஆர்இ நிறுவனத்தின் தலைமை மேலாளர் கேஷவரம் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-
திருச்சியில் மிகப்பெரிய ஷாப்பிங் மால் அமைக்கப்பட இருக்கிறது. இது மக்களுக்கு நல்ல ஷாப்பிங் அனுபவத்தை தரும். இந்த மாலானது சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட இருக்கிறது. மொத்தம் 3.9 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கபட இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments