திருச்சி - சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவிப்பு

திருச்சியில் 4 வழிச்சாலை திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி - சென்னை பசுமை வழி சாலை, திருச்சி - தஞ்சை, திருச்சி - கரூர் 6 வழி சாலை மற்றும் திருச்சி - காரைக்குடி 4 வழி சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கரூர் சாலை ஒரு பகுதி குடியிருப்புகளாகவும், மற்றொரு பகுதி காவிரி ஆறு இருப்பதால் சாலையை விரிவுப்படுத்த சிரமம் இருந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் இந்த சாலைகளை 6 வழி சாலையாக மாற்றுவதற்கான அறிவிப்பு மத்திய அமைச்சர் வெளியிட்டார். விரைவில் இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக திருச்சியில் மிகப்பெரிய சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட இருக்கிறது. துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 25 கிமீ பஞ்சப்பூர் முதல் ஜீயபுரம் வரை 19.96 கிமீ 4 வழி சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த இரண்டு புதிய நான்கு வழி சாலைகளும் அமைக்க அரசிற்கு 16 கோடி மதிப்பீட்டில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சாலைக்கான அனுமதி இன்னும் 6 மாத காலத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனுமதி கிடைத்த சில மாதங்களிலேயே ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....