திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள குளத்தில் முதலை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்…!

திருச்சியில் திருவெறும்பூா் அருகே குளத்தில் முதலை உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
திருச்சி, திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி நத்தமாடிப்பட்டியில் கல்லறை குளம் உள்ளது. இந்தக் குளத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளித்தும், துணி துவைத்தும் வருகின்றனர். அந்தவகையில் சில இளைஞர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது முதலை ஒன்று அங்கும், இங்குமாக சுற்றித் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த திருச்சி வனத்துறை அதிகாரிகள் அந்தக் குளத்தை பாா்வையிட்டு, முதலை இருப்பதை உறுதி செய்து, குளத்தின் அருகில் எச்சரிக்கை பலகையை வைத்துச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இக் குளத்தில் மூன்று மாதமாக முதலை நடமாட்டம் உள்ளது. சுமாா் 10 கிலோ எடையில் ஒரு முதலையைப் பாா்த்துள்ளனா். மேலும் எத்தனை முதலைகள் உள்ளன என்றும் தெரியவில்லை. தகவல் அளித்தும் வனத்துறையினா் முதலையைப் பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கவில்லை. முதலையால் பொதுமக்கள் மற்றும் அவா்களது விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள சூழலில் அந்த முதலையை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....