திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் ரூபாய் 4.27 கோடி மதிப்பீட்டில் 6-வது மானிய சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் பூவாளூர் சாலையில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டிடம் கட்டும் பணியினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

புதிய நகராட்சி நிர்வாக கட்டிடம் அடிக்கல் நாட்டிய இடத்திற்கு அருகே லால்குடி புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் மற்றும் புதிய என் ஐ டி கல்லூரி கட்டுவதற்கான இடத்தினை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb