சென்னையை கிட்டத்தட்ட நெருங்கும் அளவிற்கு திருச்சிக்கு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

திருச்சியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை சமீபத்தில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அதன்படி
1. கலைஞர் நூலகம்.
2. அங்குரான் அறிவியல் ஆய்வகம்.
3. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்.
4. ஒலிம்பிக் அகாடமி.
5. சிப்காட். ஆகிய திட்டங்களை நேரில் பார்வையிட்டார்.
இது போக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், திருச்சி எலிவேட்டட் காரிடார் ஆகியவற்றின் கட்டுமானங்களும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இந்த 7 அறிவிப்புகள் திருச்சியை அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போக ஆப்பிள் சப்ளையர் ஜபில் திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையை ரூ.2,000 கோடி செலவில் நிறுவ உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 5,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக மாநில அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சர்வதேச அளவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் முக்கிய உற்பத்தி மற்றும் சேவை நிறுவனம் ஆகும். ஹெச்பி மற்றும் சிஸ்கோ போன்ற முக்கிய நிறுவனங்களின் உபகரணங்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும். ஆப்பிள் போன் உற்பத்தியிலும், அதன் உபகரண உற்பத்தியிலும் முக்கிய பணிகளை செய்து வருகிறது.
ஏற்கனவே திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு (ELCOT) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்திடம் ஐடி மற்றும் ஐடி அலுவலகம் கட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் 8.9 ஏக்கர் நிலத்தை இறுதி செய்துள்ளது.
இந்த நிலையில்தான் முந்தைய ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, பெரிய அலுவலக இடத்துக்கு புதிதாக தற்போது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில், டைடல் பூங்காவிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கு முன் அதன் மதிப்பை மதிப்பீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திருச்சியில் இத்திட்டத்திற்காக 2023-24 பட்ஜெட்டில் மாநில தொழில் துறையும் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பல இட ஆய்வுகளுக்குப் பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, பஞ்சப்பூர் வருவாய் கிராமத்தில் மாநகராட்சியின் 8.9 ஏக்கர் நிலம் திட்டத்திற்கு சாத்தியமானது என்று தெரிவித்தது. இது தற்போது 14.1 ஏக்கராக மாற்றப்பட்டு உள்ளது.
இங்கே கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....