திருச்சி பள்ளி, கல்லூரிகளோடு விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் திருச்சி ஜோசப் கல்லூரி, காஜாமலை சமது பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாா். இதைத் தொடா்ந்து அங்கு வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலைய மேலாளருக்கு வந்த மின்னஞ்சலில் விமான நிலையம் உள்பட, ஏற்கெனவே மிரட்டல் விடுத்திருந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகளிலும் வெடிகுண்டு வெடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது வெறும் மிரட்டல், புரளி எனத் தெரிந்தாலும், போலீஸாா் விமான நிலைய வளாகத்தில் திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வெடிகுண்டு தடுப்பு பிரிவினா் சோதனை மேற்கொண்டனா். தொடா்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....