2024-10-03
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
திருச்சியில் ரயில் பெட்டி உணவகம் திறக்கப்பட்டது

ரயில் அருங்காட்சியகத்தில் உணவகம் போன்று எதுவும் இதுவரை இல்லை. இது தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து உணவகம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நிஜமான ரயில் பெட்டியை வைத்து ரயில் பெட்டி உணவகம் தொடங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
உடனடியாக அந்த ரயில்வே அருங்காட்சியகத்தின் சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு அந்த இடத்தில் ரயில் தண்டவாளமானது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தண்டவாளத்தில் நிஜ ரயில் பெட்டியை கொண்டு வந்து நிறுத்தி பணியை அதிகாரிகள் தொடங்கினர்.
இந்நிலையில் இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ரயில் பெட்டி உணவகம் இன்று திறக்கப்பட்டது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments