திருச்சியில் உள்ள 7 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளுக்கும் இன்று காலை 7 மணி அளவில் ஈமெயில் ஒன்று வந்தது. அதில் தங்களது பள்ளி, கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருச்சி காட்டூர் மான்போர்ட் பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழு மான்போர்ட் பள்ளியில் சோதனை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரி , ஹோலி கிராஸ் கல்லூரி , மான்போர்ட் பள்ளி , சம்மத் பள்ளி , ஆர்சிட் பள்ளி , ஆச்சாரியா பள்ளி , கேம்பியன் பள்ளி , செயின்ட் ஆன்ஸ் பள்ளி , ராஜம் பப்ளிக் ஸ்கூல் ஆகிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் இரண்டு கல்லூரிகள் மற்றும் 7 பள்ளிகளிலும் சோதனை செய்து வெடிகுண்டுகள் வைக்கப்படும் என கூறியது புரளி என கண்டுபிடித்தனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb