2024-09-14
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
மனைவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபருக்கு கத்தியால் குத்திய கணவர்

பெரிய மிளகு பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிக். இவரது மனைவியுடன் ஜான் பீட்டர் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி உள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஆசிக் ஜான் பீட்டர்ரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆசிக் மீது போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மீண்டும் ஜான் பீட்டரை ஆசிக் அவரது உறவினர் நிஜாம் ஆகிய இருவரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர்.இதில் அவரது கை மற்றும் காது ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் ஆசிக், நிஷா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments