திருச்சியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டம்: கே. என்.நேரு

திருச்சி மாநகரில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என அமைச்சர் கே. என்.நேரு பேட்டி அளித்துள்ளார்.
இரட்டை வாய்க்கால் பகுதியில் கழிவு நீர் ஊற்று நிலையம், அமைத்து பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி ரூபாய் 230.61 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
230.61 கோடி ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 141 கி.மீ நீளத்திற்கு பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டு 16,500 வீட்டு இணைப்புகள் இணைக்கப்பட உள்ளது. 9 இடங்களில் கழிவு நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் ஆகஸ்ட் 2027-ம் ஆண்டு நிறைவடையும். 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
100 கி.மீட்டருக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது. இதில் 14819 வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் 24 மணி நேரமும் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் செப்டம் 2026 ல் நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....