திருச்சி மாவட்டம், கல்லக்குடி காட்டு ஓடையின் குறுக்கே ரூ.31 லட்சத்தில் புதிதாக தடுப்பணை கட்டும் பணி தொடங்கியுள்ளது.

லால்குடி வட்டம் கல்லக்குடி கிராமத்தில் காட்டு ஓடையின் குறுக்கே டால்மியா பாரத் பவுண்டேசன் சமூக நலத் திட்டத்தின் கீழ், ரூ. 31 லட்சத்தில் தடுப்பணை அமைக்கும் பணிக்கு நடைபெறுகிறது. இதன் மூலம் தடுப்பணை அமையவுள்ள இடத்திலிருந்து 1 கிமீ சுற்றளவு உள்ள நிலங்களில் நிலத்தடி நீா் மற்றும் விவசாய கிணறுகளின் நீா் மட்டம் உயரும். மேலும், 99.19 ஹெக்டோ் பாசன நிலங்கள் பயன்பெறும்.

20 மீ, நீளம், 1.5 மீ உயரத்தில் கட்டப்படவுள்ள தடுப்பணை பணிகளை அமைச்சா் கே.என். நேரு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb