குரூப் 2 மற்றும் 2 ஏ பதவிகளுக்கு காலி பணியிடங்களுக்கான நிரப்புவதற்காக தேவு அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட நிலையில், இன்று தமிழகம் முழுவதும் முதல்நிலை தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சியில் இத்தேர்வை தந்தையும், மகளும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சொந்த ஊராக கொண்ட இளங்கோவன் திருச்சியில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் ஒரு மகன். வேதியல் ஆசிரியராக பள்ளியில் பணியாற்றி வரும் இளங்கோவன் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என எண்ணி 20 ஆண்டுகளாக தொடர் முயற்சியில் கஜினி முகமது படை எடுத்தது போல் தேர்வு எழுத படை எடுத்து வருகிறார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்காக திருச்சி பொன்மலைப்பட்டி திரு.இருதய பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பலர் தேர்வு எழுத வந்திருந்தனர். அந்த தேர்வு மையத்திற்கு இளங்கோவனும் தேர்வு எழுத வந்திருந்தார். சுவாரஸ்ய நிகழ்வாக சிவில் இஞ்சினியரிங் படித்து வரும் அவரது மகள் மதுபாலாவும் அதே தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்திருந்தார்.

இருவருமே கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வருகின்றனர். கடந்த தேர்வுகளின் போது இருவரும் வேறு வேறு தேர்வு மையங்களில் எழுதி வந்த நிலையில் தற்போது இருவருக்கும் ஒரே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இருவருக்கும் வேறு வேறு தேர்வு அறை ஒதுக்கப்பட்ட நிலையில் அவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். பல ஆண்டுகளாகவே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தான் தயாராகி வருவதாகவும் தற்போது மகளுடன் சேர்ந்து தேர்வு எழுதுவது மகிழ்ச்சியாக இருப்பதாக இளங்கோவன் தெரிவித்திருக்கிறார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb