நாளை செப். 14 இல் உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள்

திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 14 ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கீழ்கண்ட வட்டங்களில் அதன் எதிரே குறிப்பிடப்பட்டுள்ள நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம், தனி வட்டாட்சியர்கள் / வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம்
திருச்சி கிழக்கு வட்டத்துக்கு பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா் தலைமையில் அய்யப்ப நகா் ரேஷன் கடையிலும், திருச்சி மேற்கு வட்டத்துக்கு திருச்சி வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் சண்முகா நகா் கீழத்தெரு ரேஷன் கடையிலும், திருவெறும்பூா் வட்டத்துக்கு சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தலைமையில் எழில்நகா் ரேஷன் கடையிலும், ஸ்ரீரங்கம் வட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தலைமையில் புங்கனூா் ரேஷன் கடையிலும், மணப்பாறை வட்டத்துக்கு ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் இனாம்புதூா் ரேஷன் கடையிலும், மருங்காபுரி வட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தலைமையில் அய்யன்புதுப்பட்டி ரேஷன் கடையிலும், லால்குடி வட்டத்துக்கு லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் மணக்கால் ரேஷன் கடையிலும், மண்ணச்சநல்லூா் வட்டத்துக்கு மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் தலைமையில் பீரங்கிமேடு ரேஷன் கடையிலும், முசிறி வட்டத்துக்கு முசிறி வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் தண்டலை ரேஷன் கடையிலும், துறையூா் வட்டத்துக்கு கலால் உதவி ஆணையா் தலைமையில் கலிங்கமுடையான்பட்டி ரேஷன் கடையிலும், தொட்டியம் வட்டத்துக்கு மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையில் அக்ரஹாரம் ரேஷன் கடையிலும் முகாம்கள் நடைபெறவுள்ளன.
இக்கூட்டங்களில் பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர கோரிக்கைகளை தெரிவித்துப் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....