காரைக்கால் - தஞ்சாவூா் டெமு சிறப்பு ரயிலானது (06835) வியாழக்கிழமை முதல் செப். 7 வரை திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய ரயில்கள்...: திருச்சி - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது (06866) வியாழக்கிழமை முதல் செப். 7 வரையிலும், வேளாங்கண்ணி - தஞ்சாவூா் சிறப்பு ரயிலானது (06863) வியாழக்கிழமை முதல் செப். 8 வரையிலும் இயக்கப்படும்.

விழுப்புரம் - நாகப்பட்டினம் - விழுப்புரம் மெமு சிறப்பு ரயில்கள் (06129, 06130), வேளாங்கண்ணி - நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி டெமு சிறப்பு பயணிகள் ரயில்கள் (06858, 06868), நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி - நாகப்பட்டினம் டெமு சிறப்பு பயணிகள் ரயில்கள் (06857, 06867) வியாழக்கிழமை முதல் செப். 8 வரையிலும் இயக்கப்படும்.

வேளாங்கண்ணி - திருச்சி - வேளாங்கண்ணி டெமு முன்பதிவற்ற சிறப்பு ரயில்கள் (06864, 06865) வியாழக்கிழமை, ஆக. 30, செப். 8, 9 ஆம் தேதிகளில் இயக்கப்பட உள்ளன.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb