2024-08-29
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிகள் விரைவில் தொடக்கம்

திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110- விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக திருச்சியில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. திருச்சியில் டி.வி.எஸ். டோல்கேட் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. முறையாக இதற்கான அனுமதி பெறப்பட்டதும் நூலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு உள்ளது. நூலக கட்டுமான பணிகளை துரிதப்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments