திருச்சியில் மெட்ரோ திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இதில் திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட விரிவான ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டு இருக்கும் வேளையில் இதற்கான மதிப்பீடு ரூ.11,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று சென்னை அப்டேட்ஸ் டிவிட்டர் கணக்கில் பதிவிடப்பட்டு உள்ளது.

திருச்சி மெட்ரோ ரயில் திட்டமானது, தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி நகரத்திற்கான முக்கிய விரைவுப் போக்குவரத்து முறையாகும். முதலில், இது திருச்சிராப்பள்ளி மோனோரெயில் திட்டமாக முன்மொழியப்பட்டது, ஆனால் ஆய்வறிக்கை முடிவில் மெட்ரோ ரயில் திட்டமாகச் செயல்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டது. இதன் படி ஆரம்பக்கட்ட திட்டம் 45 கி.மீ நீளமுள்ள இரண்டு லைனில் 45 மெட்ரோ நிலையங்களுடன் இந்த மெட்ரோ திட்டம் செயல்படுத்தப் பரிந்துரைத்தது.

திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான போக்குவரத்து திட்டத்தைத் தீட்டப்பட்ட போது 3 வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

லைன் 1 - சமயபுரம் முதல் வயலூர்(18.7 கி.மீ)

லைன் 2 - துவாக்குடி முதல் பஞ்சப்பூர் (26 கி.மீ)

லைன் 3 - ரயில்வே ஜங்ஷன் முதல் பஞ்சப்பூர் (23.3 கி.மீ) விரிவான செய்தியை தயாரிக்கும் பணி முடிந்த பின்னர், மெட்ரோ நிலையங்கள் மற்றும் வழிகள் மாற்றப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகரத்திற்கான விரிவான இயக்கத்திற்கான திட்டத்தை (Comprehensive Mobility Plan) தயாரிக்கும் பணியைத் திருச்சி மாநகராட்சி 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இது போக்குவரத்து முறை மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பை ஆய்வு செய்து பல முக்கியமான விபரங்களைத் தொகுத்துச் சமர்ப்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து 2022 மே மாதம், CMRL விரிவான சாத்திய அறிக்கையைத் தயாரிக்கும் பணியை தொடங்கியது. அதன் பிறகு, 2022 ஜூன் மாதம், CMRL மற்றும் திருச்சி மாநகராட்சி, CMP தரவை மெட்ரோ DFR க்காக பயன்படுத்துவது குறித்து விவாதித்து அடிப்படையாகக் கொண்டு Detailed Feasibility Report தயாரிக்கப்பட்டது

2023 ஏப்ரல் மாதம், CMP பணி நிறைவடைந்தது மூன்று சாத்தியமான வழித்தடங்களையும், தொடர்புடைய போக்குவரத்து தரவுகளையும் பரிந்துரைத்தது. 2023 செப்டம்பர் மாதம், CRML, 45 கி.மீ நீளமுள்ள இரண்டு வழித்தடங்களுடன் திருச்சிக்கு மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் திட்டத்தின் விரிவான அறிக்கையை தமிழ்நாடு அரசுக்குச் சமர்ப்பித்தது. தற்போது இதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.

CRML விரிவான சாத்திய அறிக்கையில் லைன் 1ல் சமயபுரம் முதல் வயலூர் மத்தியலான 19 கி.மீ வழித்தடத்தில் சுமார் 19 நிறுத்தங்கள் உடனும், லைன் 2ல் துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையிலான 26 கி.மீ வழித்தடத்தில் 26 நிறுத்தங்கள் என 2 வழித்தடத்தில் மொத்தம் 45 நிறுத்தங்கள் உடன் திருச்சி மெட்ரோ திட்டம் சுமார் 11000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb