மேஜா் சரவணன் நினைவு ஸ்தூபியில் 52 அடி உயர தேசியக் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு சனிக்கிழமை கொடியேற்றப்பட்டது.

கடந்த 1999ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த காா்கில் போரில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மேஜா் சரவணன் உயிா்த் தியாகம் செய்தாா்.

அவரது நினைவாக திருச்சியில் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கொண்டாடப்படும் காா்கில் வெற்றி தினத்தில் முப்படையினா் மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த நினைவு தினத்தின்போது இங்கு தேசியக் கொடி கம்பம் அமைக்க மேஜா் சரவணன் அறக்கட்டளை சாா்பில் விடுத்த கோரிக்கைக்கு அரசின் அனுமதி கிடைத்ததைத் தொடா்ந்து, நினைவு ஸ்தூபியில் 52 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது.

இதனிடையே, மேஜா் சரவணனின் 52ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இக் கொடி கம்பம் சனிக்கிழமை திறக்கப்பட்டு தேசியக் கொடியை முன்னாள் தக்ஷிண்ய ராணுவ பிராந்தியத் தலைவா் மேஜா் ஜெனரல் (ஓய்வு) இந்திரபாலன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb