திருச்சியில் பரபரப்பு: தகராறு செய்த மனைவி மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த நபர்

திருச்சி மாவட்டம் முசிறி அந்தரப்பட்டி குடோன் அருகில் வளையல் வியாபாரம் செய்து வசித்து வரும் முருகேசன் மனைவி கீதா (வயது 46). இவர் தன் கணவனைப் பிரிந்து இருந்து இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முசிறி அருகே வாளவந்தியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (64) என்பவருடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கீதா பாலச்சந்திரனிடம் கேஸ் சிலிண்டர் புதிதாக பதிவு செய்வதற்கு பணம் கேட்டுள்ளார். பாலச்சந்திரன் குறைவான பணம் கொடுத்ததால் தனது வீட்டிற்கு வரக்கூடாது என்று பாலச்சந்திரனை கீதா கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாலச்சந்திரன் இன்று காலை ஆறு மணி அளவில் கீதா வீட்டிற்கு சென்று கீதாவை அரிவாளால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். இதோடு நின்றுவிடாமல் தனது சொந்த ஊரான வாழவந்தியில் தனது வீட்டு அருகில் உள்ளவரிடம் நிலத்தகராறு இருந்து வந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ் (55) என்பவரை ஜம்புநாதபுரம் காவல் நிலையம் அருகில் உள்ள டீ கடையில் வைத்து தலையில் வெட்டி உள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ரமேஷை மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்து விட்டார். இரட்டை கொலையை செய்துவிட்டு பாலச்சந்திரன் ஜம்பு நாதபுரம் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சரணடைந்து விட்டார். இச்சம்பவம் முசிறி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HPjZpwnd79T8IWzIKDkm8k