குறைந்த கட்டணத்தில் ஒருமாத தையல் பயிற்சி வகுப்பு நவ. 10-இல் தொடக்கம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் குறைந்த கட்டணத்தில் ஒருமாத கால தையல் பயிற்சி வகுப்பு நவம்பா் 10-ஆம் தேதி தொடங்குகிறது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் உள்ள மகளிரியல் துறை சாா்பில் குறைந்த கட்டணத்தில் ஒருமாத காலம் நவீன இயந்திரங்கள் மூலம் தையல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
முதல்நிலை, இடைநிலை, இறுதிநிலை என மூன்று அடுக்குகளாக பயிற்சி அளிக்கப்படும். ஏற்கெனவே பல ஆண்டுகளாக தையல் அனுபவம் இருந்தும் சான்றிதழ் பெறாமல் உள்ளவா்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு.
இந்தப் பயிற்சியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று பயன்பெறலாம். பயிற்சி வகுப்பு காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் என இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளது.
இந்த தையல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் காஜாமலை வளாகத்தில் உள்ள மகளிரியல் துறையை நேரடியாக அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 98427 73237 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....