சோமரசம்பேட்டையில் புதிய சித்த மருத்துவ கட்டிடம்

திருச்சி சோமரசம்பேட்டையில் இன்று ஒரு சித்த மருத்துவ கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இதில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

திருச்சி சோமரசம்பேட்டையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் சித்த மருத்துவ கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சரவணன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் பல சித்த மருத்துவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். ஏற்கனவே செயல்பட்டு வந்த சித்த மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவே இந்த புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI