மாநிலத்தின் முதல் தொழில்நுட்ப மையத்தின் பிராந்திய அலுவலகம் திருச்சியில் அமையவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் தொழில்நுட்ப மையத்தின் பிராந்திய அலுவலகத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார் . இதனால் திருச்சி மாவட்ட இளைஞர்கள் பலரும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இது அமைந்துள்ளது. இந்த மையம் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உதவும். இது சென்னையைத் தவிர மற்ற ஊரில் திறக்கப்படும் முதல் மையம் ஆகும்.
திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இந்த மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. JIGSAW (Joint Innovation Gateway for Synergistic Startup–Academic–Industry–Investor Work) என்ற தளத்தின் மூலம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுவரை, இந்த மண்டலத்தில் இருந்து 687 ஆராய்ச்சியாளர்கள், காப்புரிமை வைத்திருப்பவர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
iTNT மையம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மாநில அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம் நிதி உதவி பெறுகிறது. இது மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும். இந்த மையம் சைபர் பாதுகாப்பு, எலக்ட்ரிக் வாகனங்கள், புவிசார் தொழில்நுட்பங்கள், காலநிலை தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி போன்ற வளர்ந்து வரும் துறைகளிலும் கவனம் செலுத்தும்.
இந்த மையம் AI (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு, machine learning எனப்படும் இயந்திரக் கற்றல், robotics எனப்படும் ரோபோட்டிக்ஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும். மேலும் cybersecurity எனப்படும் இணைய பாதுகாப்பு, EV (Electric Vehicle) எனப்படும் எலக்ட்ரிக் வாகனங்கள், geospatial technologies எனப்படும் புவிசார் தொழில்நுட்பங்கள், climate tech எனப்படும் காலநிலை தொழில்நுட்பம் மற்றும் smart cities எனப்படும் ஸ்மார்ட் சிட்டி போன்ற வளர்ந்து வரும் துறைகளிலும் கவனம் செலுத்தும்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI