முதல் நாளே லேட்டா வந்தா எப்படி? விஜய்க்கு வழிவிடாத தொண்டர்கள்.. முக்கியமான ரூல்ஸையே மீறிட்டாங்களே!

திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள தவெக தலைவர் விஜய்க்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துள்ள நிலையில் இதுவரை திருச்சி மரக்கடை பகுதிக்கு அவர் வந்தடையவில்லை. ஒரு வேளை அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அவர் பேசினால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தவெக விஜய் தனது முதல் பிரச்சார பயணத்தை திருப்புமுனையை ஏற்படுத்தும் திருச்சியில் இருந்து தொடங்குகிறார். திருச்சி மரக்கடை அருகே எம்ஜிஆர் சிலைக்கு பக்கத்தில் விஜய் பேசுவதற்கு சரியாக அரை மணி நேரம் மட்டுமே காவல் துறை வழங்கியது.

அதாவது 10.30 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பேச அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் கொடுத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் இந்த கட்டுப்பாடுகள். இந்த பிரச்சாரத்திற்காக அவருக்கு தனி பிரத்யேக பிரச்சார வேனும் தயார் செய்யப்பட்டது. அதில் கேரவனில் இருக்கும் அனைத்து வசதிகளும் இருக்கும்.

இந்த பிரச்சாரத்திற்காக அவர் சென்னையிலிருந்து இன்று காலை தனிவிமானம் மூலம் புறப்பட்டார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள் யாரும் வரக் கூடாது என்பதற்காக தடுப்புகள் போட்டும் அதைத்தாண்டி ஓடிவந்தனர்.

இதையடுத்து எப்படியோ விஜய் பிரச்சார வாகனத்தில் ஏறிவிட்டார். அவரது வாகனம் தொண்டர்கள் வெள்ளத்தில் ஊர்ந்து செல்கிறது.

இந்த நிலையில் அவருக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இதுவரை விஜய், மரக்கடை பக்கம் வரவில்லை. இவர் வரும் வழியெல்லாம் கூட்டம் அதிகமாகியுள்ளது. விமான நிலையத்தில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் வழியாக தலைமை தபால் நிலைய சிக்னல், மேலப்புதூர் சுரங்கப்பாதை வழியாக பாலக்கரை பிரபாத் ரவுண்டானா, பழைய மதுரை சாலையில் உள்ள மரக்கடைக்கு வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் தனது பேச்சை முடித்துக் கொண்டு, காந்தி சந்தை, தர்பார் சாலை, பழைய பால் பண்ணை வழியாக அரியலூர் திரும்பும் அளவுக்கு இவரது திட்டம் வகுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்னும் மரக்கடைக்கே இவரது வாகனம் வராததால்  இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI