திருச்சி விமான நிலையத்தில் FTI-TTP திட்டத்தின் கீழ் அதிவிரைவு இமிகிரேஷன் வசதி!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், பயணிகளின் இமிகிரேஷன் நடைமுறைகளை விரைவுபடுத்த FTI-TTP திட்டத்தின் கீழ் 8 அதிநவீன இ-கேட்கள் நிறுவப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , வியாழக்கிழமை இந்த நவீன வசதியை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் மூலம், இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (OCI) மிக விரைவாகவும், எளிதாகவும் குடிவரவு சோதனைகளை முடிக்க முடியும்.
FTI-TTP (Fast Track Immigration – Trusted Traveller Programme) என்பது, நம்பகமான பயணிகளுக்கான அதிவிரைவு குடிவரவு திட்டம் ஆகும். இதன் மூலம், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், மிக விரைவாக குடிவரவு சோதனைகளை முடிக்க முடியும்.
இந்த வசதியைப் பயன்படுத்த விரும்புபவர்கள், www.ftittp.mha.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பெயர், புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு, ஒரு OTP உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். மேலும், FRRO அலுவலகத்திலோ அல்லது இ-கேட் வசதி உள்ள விமான நிலையங்களிலோ பயோமெட்ரிக் (கைரேகை மற்றும் முக அடையாளம்) பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த பயணிகள், இ-கேட்டில் தங்கள் போர்டிங் பாஸை ஸ்கேன் செய்ய வேண்டும். பிறகு, பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். கைரேகை சரிபார்க்கப்பட்டதும், இ-கேட் தானாகவே திறக்கும். மனிதர்களின் தலையீடு இல்லாமல், குடிவரவு அனுமதி கிடைக்கும்.
தற்போது 8 இ-கேட்கள் போதுமானதாக இருக்கும் என்றும், தேவைப்பட்டால் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்று தெரிவித்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் தற்போது 8 இ-கேட்கள் உள்ளன. வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளில் தலா 4 கேட்கள் உள்ளன. ஏற்கனவே உள்ள 102 குடிவரவு கவுண்ட்டர்களுக்கு கூடுதலாக, இந்த இ-கேட்கள் நிறுவப்பட்டுள்ளன.
FTI-TTP வசதி கொண்ட 13 விமான நிலையங்களில், திருச்சி இரண்டாவது விமான நிலையம் ஆகும். முதல் விமான நிலையம் சென்னை.
மொத்த கவுண்டர்கள்: 102
இ-கேட்கள்: 8 (வருகை: 4, புறப்பாடு: 4)
இ-கேட்டில் அனுமதி நேரம்: 30 வினாடிகள்
FTI வசதி உள்ள விமான நிலையங்கள்: 13
FTI வசதி உள்ள தமிழ்நாட்டு விமான நிலையங்கள்: 2
FTI பதிவு செய்த பயணிகள்: 3 லட்சம் (இந்தியா முழுவதும்)
பயன்படுத்தியவர்கள்: 2.6 லட்சம்
இந்த புதிய வசதி, திருச்சி விமான நிலைய பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....