இந்த கொடூர கொலையை கண்டித்து, தமிழக எதிர்க்கட்சிகள், திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்..

இந்த கொலை தொடர்பான விசாரணையை சென்னை போலீசார் விசாரித்து வருகிறார்கள் என்றாலும், சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியே கோரிக்கை விடுத்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காவல்துறை மற்றும் உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம் என்றும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழக அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என்றும் கொந்தளித்து கூறியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அக்கட்சி விடுத்துள்ளது.

"இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது... வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் வெளியிட்டிருக்கிறார்.

எனினும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, என ஒட்டுமொத்த கட்சிகளுமே கண்டனம் தெரிவித்துள்ளன.. தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் விடாமல் கேள்விகளை துளைத்தெடுத்து கொண்டிருக்கின்றன..

இப்படிப்பட்ட சூழலில், நமக்கு ஒரு பிரத்யேகமான செய்தி கிடைத்துள்ளது.. அதாவது, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம், முதல்வர் ஸ்டாலினை தூங்கவிடவில்லையாம். காரணம், அரசியல் கட்சி தலைவர்கள் குறி வைக்கப்படுவதாக அவர் நினைக்கிறாராம்.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலையை தொடர்ந்து பகுஜன் சமாஜ் பார்டி லீடர் படுகொலை நடந்திருப்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லையாம். மாநில உளவுத்துறையின் உயரதிகாரியை தொடர்பு கொண்டு கடினமான வார்த்தைகளால் கோபப்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

"நீங்கள் என்ன தான் செஞ்சிக்கிட்டு இருக்கீங்க? க்ரைம் மீட் பார்க்கும் உங்க ஆட்களுக்கு சோர்ஸ் இருக்கிறதா? இல்லையா? சென்னை சிட்டி I.S என்ன பண்ணிக்கிட்டு இருக்கு? ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உங்களால் ஏன் ஸ்மெல் பண்ண முடியவில்லை? உளவுத்துறை செயலிழந்துடுச்சுன்னு எல்லோரும் கூப்பாடு போடப்போறாங்க. என்ன பதில் சொல்வீங்க?" என்றெல்லாம் கடிந்து கொண்டாராம்.

அதுமட்டுமல்ல, "இந்த சம்பவம் குறித்து ரிப்போர்ட் கொடுங்க" என்று சொல்லி கோபமாக போன் லைனை துண்டித்துக் கொண்டாராம் ஸ்டாலின்.

சமீபத்தில்தான், சென்னை பெருநகர உளவுத்துறையின் முக்கிய அதிகாரி அரவிந்தனை இடமாற்றினார்கள். அந்த நடவடிக்கை நடந்து சில நாட்களிலேயே இந்த படுகொலை நடந்திருப்பது உளவுத்துறையினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு மாயாவதி விசாரித்ததாகவும், குற்றவாளிகளை 4 மணி நேரத்தில் கைது செய்திருக்கிறோம் என்று ஸ்டாலின் சொன்னதாகவும் ஒரு தகவல் உளவுத்துறை தரப்பில் எதிரொலிக்கிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb