சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து மூத்த வீரர் விராட் கோலி ஓய்வு பெற்று இருக்கிறார். இனி அவர் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளார். இந்த நிலையில் டி20 அணியில் விராட் கோலியின் இடத்தை பிடிக்கப் போவது யார்? என்ற கேள்வி எழுந்தது.

தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் மூன்றாம் வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து விராட் கோலியின் மூன்றாம் வரிசையை ருதுராஜ் கெய்க்வாட் நிரந்தரமாக பிடிக்க இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

டி20 அணியில் நீண்ட காலமாக மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்து வந்தார் விராட் கோலி. 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் துவக்க வீரராக ஆடினார். அதே போல, ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரராக ஆடி வந்த நிலையில், கடந்த ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் மூன்றாம் வரிசையிலும் பேட்டிங் செய்தார்.

தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் அவர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய உள்ளார். இதை அடுத்து விராட் கோலி போலவே டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த தேர்வாக இருப்பார் என்று நம்பிக்கை எழுந்துள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் அதிரடி இடது கை பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா துவக்க வீரர்களாக களம் இறங்க உள்ளனர். அதனால், சற்று நிதானமாகவும், கடைசி வரை நின்றும் ஆடக் கூடியவரான ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாம் வரிசையில் களமிறங்க இருக்கிறார்.

டி20 அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாம் வரிசையை தனதாக்கிக் கொண்டால், அடுத்து விராட் கோலி சில தொடர்களில் ஓய்வு பெறும் போது ஒரு நாள் அணி மற்றும் டெஸ்ட் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெற முடியும். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார். அதற்குள் ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாம் வரிசையில் இந்திய அணியின் அடுத்த விராட் கோலி ஆக வாய்ப்பு உள்ளது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb