2024-07-05
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து இன்று ( ஜூலை 5ம்தேதி ) காலை திருச்சி வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தான் முழங்காலில் அணிந்திருந்த knee cap- ல் தங்கத்தை தகடு வடிவில் மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்திவரப்பட்ட தங்கத்தின் இந்திய மதிப்பு ரூபாய் 1. 16 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments