2024-07-05
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
போலி ஆவணம் கொடுத்து பாஸ்போர்ட் 5 பேர் கைது

மலேஷியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை, பல விமானங்களில் வந்த பயணியரின் பாஸ்போர்ட்களை, திருச்சி விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்லதுரை, 40, திருவாரூர் மாரிமுத்து, 48, காரைக்குடி முகமது காசிம், 58, ராமநாதபுரம் ஜாகீர் உசேன், 54, பொன்னமராவதியைச் சேர்ந்த வள்ளியம்மாள், 72, ஆகியோர், போலி ஆவணங்கள் மூலம், பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை திருத்தி, பாஸ்போர்ட் எடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஐந்து பேரும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள், ஐந்து பேர் மீதும் வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb
0 Comments