ஆசனவாயில் கடத்திய தங்கம் பறிமுதல்

ஷார்ஜாவில் இருந்து ஆண் பயணியின் ஆசனவாயில் கடத்தி வரப்பட்ட, 780 கிராம், 70.71 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கத்தை, திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் ஷார்ஜா நகரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, திருச்சிக்கு 'ஏர் இந்தியா' எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணியரை, திருச்சி விமான நிலையத்தில், கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, சந்தேகத்தில், ஓர் ஆண் பயணியை தனியே அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், அவரது ஆசனவாயில், பசை வடிவில் நான்கு உருண்டைகளாக, 70.71 லட்சம் மதிப்புள்ள, 780 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்தது.
தங்கத்தை பறிமுதல் செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....