இதற்கான அனுமதி பெற்று விரைவில் அங்கு பணிகள் அனைத்தும் தொடங்கப்பட இருக்கிறது. 

பஞ்சப்பூரில் பேருந்து நிலையத்துக்கு எதிரில் புட்பார்க் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட இருக்கிறது.

இந்த உணவுப்பூங்காவானது 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், பன்சோன், 5 டிதியேட்டர் உள்ளிட்டவை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவுப்பூங்காவானது பஞ்சப்பூரில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் அனுமதி பெற்று அங்கு கட்டஅவுட்டானது வைக்கப்பட்டுள்ளது. திருச்சியின் முக்கிய பகுதியில் இது அமைய இருப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்க இருக்கிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb