திருச்சியில் உள்ள எலந்தபட்டி கிராமத்தில் ஒலிம்பிக் பயிற்சி அகாடமிக்கான ஆரம்பகட்ட பணிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) தொடங்கியுள்ளது. ரூ.150 கோடி மதிப்பீட்டில் திருவெறும்பூர் அருகே 47.8 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு கட்டங்களாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கட்டம் I இன் கீழ் 15க்கும் மேற்பட்ட உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு உள்கட்டமைப்புகளுக்கு அடிக்கல் நாட்டினர். "முதல் கட்டத்தை 18 மாதங்களுக்குள் முடிக்க கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்படும்" என்று நேரு கூறினார்.

முதல் கட்டத்திற்கு 50 கோடியும், இரண்டாம் கட்டத்திற்கு 100 கோடியும் ஒதுக்கப்பட்டது.

சுமார் 71,000 சதுர அடி பரப்பளவில் உட்புற விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி வளாகம் மற்றும் நீச்சல் குளம் கட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஒலிம்பிக் தரத்திலான கூடைப்பந்து, பூப்பந்து மற்றும் கைப்பந்து மைதானங்கள் உருவாக்கப்படும் என்று விளையாட்டுத் துறை தெரிவித்துள்ளது. கலை ஜிம்னாஸ்டிக்ஸ், மல்யுத்தம், குத்துச்சண்டை மற்றும் பளு தூக்குதல் ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

முதலாம் கட்டத்தின் கீழ் ஒலிம்பிக் தர உட்புற நீச்சல் குளம் (25X50 மீ), நிலையான கால்பந்து மைதானம் (புல்) மற்றும் எட்டு வழி செயற்கை ஓடுதளம் (400 மீ) ஆகியவை கட்டப்படும்.

"முதல் கட்டம் முடிந்த பின்னரே இரண்டாம் கட்டம் தொடங்கும்" என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

சைக்கிள் ஓட்டுதலுக்கான velodrome track, கிரிக்கெட் மைதானம், கைப்பந்து கோர்ட்டுகள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் உட்புற வில்வித்தை போன்ற உள்கட்டமைப்புகள் இரண்டாம் கட்டத்தில் வரும்.

அதே நேரத்தில், திருவெறும்பூருக்கு அருகிலுள்ள சூரியூர் கிராமத்தில் முதலமைச்சரின் மினி ஸ்டேடியம் மற்றும் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கான டெண்டரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. சூரியூர் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது திருச்சியின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டை நடத்துகிறது. கட்டுமானத்திற்காக மாநில அரசு 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மினி ஸ்டேடியத்தில் கபடி, கைப்பந்து மற்றும் தடகள வசதிகள் இருக்கும்.

திருச்சி ஒலிம்பிக் அகாடமிக்கான பணிகள்:
மொத்த செலவு: ரூ.150 கோடி
பரப்பளவு: 47.8 ஏக்கர்
இடம்: எலந்தப்பட்டி, திருவெறும்பூர்.

திட்டச் செலவு:
கட்டம் I: ரூ.50 கோடி
காலம்: 18 மாதங்கள்
கட்டம் I இல் மொத்த விளையாட்டு உள்கட்டமைப்பு: 15+
கட்டம் I இல் சேர்க்கப்பட்டுள்ள சில விளையாட்டுகள்:
1. பேட்மின்டன்
2. கைப்பந்து
3. கூடைப்பந்து
4. நீச்சல்
5. ஜிம்னாஸ்டிக்ஸ்

சூரியூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் மினி மைதானம்:
செலவு: ரூ. 3 கோடி
வசதிகள்:
1. ஜல்லிக்கட்டு அரங்கம்
2. கபடி மைதானம்
3. கைப்பந்து மைதானம்
4. தடகளம்