ஸ்ரீரங்கம் கோவிலில் தற்போது வைகுண்ட ஏகாதசி நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 20 நாட்கள் இந்த விழா நடைபெறும் என்பதால் ஏராளமான மக்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் போன்ற விஷேச நாட்களும் வர இருப்பதால் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்றும் கோரிக்கையானது எழுந்துள்ளது.

இது தொடர்பாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், சிறப்பு ரயில்கள் விட வேண்டும் என்றும், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில், முக்கியமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு ஸ்ரீரங்கம், அரியலூர் வழியாக தினசரி ரயிலை இயக்க வேண்டும் என்றும், தற்போது விழுப்புரம்-திருப்பதி வரை செல்லும் இண்டர்சிட்டி ரயிலை தற்காலிகமாக திருச்சி வரை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இது தவிர அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், ஹம்சபர் எக்ஸ்பிரஸ், மும்பை எக்ஸ்பிரஸ், ஷாலிமார் எக்ஸ்பிரஸ் போன்ற அதிவேக ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. 

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb