திருச்சியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியதை அடுத்து தமிழக அரசு அரசாணை வெளியான 2 நாட்களில் தமிழக அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் நூலகம் அமைக்க பணிகள் தொடங்கும்.

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பில் திருச்சி மாவட்டத்தில் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் பலரும் இடங்களை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். 

இதில் முதற்கட்டமாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட கட்டடமாக அமைக்க பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் திருச்சி மாவட்டத்தில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கு சுமார் 290 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. 

இவ்வாறு இருக்க திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணி மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. இதற்காக 290 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கடந்த 17-ந் தேதி பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டிருந்தது. அரசாணை வெளியிட்ட 2 நாட்களில், கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் கோரி உள்ளது.

ஜனவரி மாதத்திற்குள் டெண்டர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் பணிகள் அனைத்தும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb